மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் மரக்குற்றி விழுந்ததில் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும்,

கிரேனால் மரக் குற்றிகளை இறக்கும் போது, அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே விழுந்ததுள்ளன.

இதன்போது, கீழே இருந்த ஊழியர் மீது மரக்குற்றிகள் விழுந்துள்ளது.

இதன் காரணமாக , கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது

Leave a Reply