யாழ்.செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்றையதினம் ஆரம்பமானது.

இந்நிலையில் தமிழர் தாயகங்களில் முள்ளிவாய்க்கால் வாரத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

இதேவேளை இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு ஈகை சுடர் ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a Reply