125 மில். பார்வையாளர்களை கடந்த ‘மெனிக்கே மஹே ஹிதே’!
ஒரேயொரு பாடல் மூலம் உலகம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த இலங்கைப் பாடகி யொஹானி டீ சில்வாவின் மனிகே மகே ஹிதே என்ற பாடல் நான்கு மாதங்களில் 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி இந்தப் பாடல் யூடியுப் வலைத்தளத்தில் உத்தியோகப்பூர்வமாக பதிவேற்றப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி 50 மில்லியன் பார்வையாளர்களையும், இந்த மாதம் 11ஆம் திகதியளவில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, தற்போது 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.