சீனாவின் உதவிக் கரத்தால் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

சீனாவின் யுவான் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற உலர் உணவு பொருட்கள்

இன்று (13) கிண்ணியா பகுதியிலும் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்கேணி,ஈச்சந்தீவு கிரமாம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பஹீமா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply