யாழ் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ். மாநகர சபை அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக உணவு ஒறுப்பப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபன் 34 ஆவது ஆண்டின் நினைவு அஞ்சலி நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று மாநகர சபை அமர்வு கூடிய நிலையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், கடந்த 23 ஆம் திகதி தியாகி திலீபனின் நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட யாழ் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பண்டார நாயக்காவின் நினைவேந்தல் செய்ய முடியுமாக இருந்தால், தமிழ் மக்களுக்காகப் போராடியவர்களுக்கு நினைவேந்தல் செய்வதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply