குச்சவெளி தவிசாளருடன் குளோபல் வன் அமைப்பு விசேட சந்திப்பு

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கும்,குளோபல் வன் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (28) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.

குச்சவெளி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மலசலகூடங்கள் மற்றும் குடிநீர் வசதி இன்மையால் அவதிப்படும் மக்கள் மற்றும் வீடு வசதிகள் இல்லாத வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு குளோபல் வன் நிறுவனம் முன்வந்துள்ளமை தொடர்பான விடயம் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் ஜனாப் வீ.எம்.றிசாத்(இம்ஜாத்) அவர்களின் ஊடாக சபையின் தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கு அமைய அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜனாப் அன்சாரி அவர்களுக்கும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு குச்சவெளி பிரதேச சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளரினால் எமது குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வசதி குறைந்த மக்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்க முன்வந்தமைக்கு தனதும் சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் சார்பாக தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு தவிசாளர் என்ற வகையில் நானும் எமது சபையின் உறுப்பினர்கள் மற்றும் சபையின் செயலாளர் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply