நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு மாநகர சபை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்க நகர சபை தீர்மானம் எடுத்த போதும் நகராட்சி ஆணையர் அதற்கு அனுமதி வழங்காததாதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர சபை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் நகராதிபதி ரோசி சேனாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரம்சி டோனியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
மக்களுக்கு உணவு பொதிகளை வழங்குவதற்கான அனுமதியை தர மறுத்த காரணத்தினால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் ஆர்ப்பாட்டத்தை ரம்சி டோனி ஆரம்பித்துள்ளார்.
இதன் பின்னர் ஆளும் கட்சி உறுப்பினர்களாலும் போராட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ .4,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியை சதோச மூலமாக வழங்க நகர ஆணையர் முதலான அதிகாரிகள் அனுமதி வழங்காதது வருத்தமளிப்பதாக உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்திருந்த நகர சபை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நகராட்சி ஆணையர் நகராதிபதியின் அதிகாரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தி நீதியை நிலைநாட்டுமாறும் மேற்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


