சுகாதார ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று(27) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.

நோயாளர்களை சிரமத்துக்கு ஆளாக்கும் நோக்கத்திற்காக சுகாதார ஊழியர்கள் போராட்டம் மேற்கொள்ளவில்லை. கொவிட் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு சுகாதார ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கே அந்தப் போராட்டம் நடைபெற்றது.

விஷேடமாக கொவிட் தொற்று கட்டுப்படுத்துவதற்காக உயிரைப் பணயம் வைத்து செயற்படுகின்ற சுகாதாரத்தறையினருக்கு கொரோனா உதவித் தொகையாக மாதாந்தம் 7ஆயிரத்து 500ரூபா வழங்கி வந்தது. தற்போது அந்தத் தொகையை முற்றாக நீக்கி இருக்கின்றது. அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்திற்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள் சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்திருக்கிறது என்றார்.

Leave a Reply