மினிஹிரிகம, மின்னேரியாவில் உள்ள மக்கள் வங்கி அதன் இயந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்து சுமார் 10 மில்லியன் ரூபாய் திருடப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி இரவு இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மக்கள் வங்கியின் மேலாளர் மின்னேரியா பொலிசில் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய லொரியில் வந்த ஒருவரால் இந்த திருட்டு நடந்துள்ளது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், ATM இயந்திரத்தின் தகடுகள் வெட்டப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது எனவும் இதற்காக ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் கூட அதற்காக கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ATM இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா அமைப்பு கூட கழட்டப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தீவிரமான தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருவதாகவும் மின்னேரியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.


