இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் பின்னோக்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மக்களுக்கு உணவு இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை அத்தியாவசிய பொருட்கள் இல்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு சீரழிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பகுதிகளில் மனநல மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு அதில் அவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


