
கொரோனாவால் யாழில் ஒருவர் சாவு! மரண நிகழ்வில் அவர் பங்கேற்றவர்!
கொடிகாமம் மீசாலை வடக்கு பகுதியில் தனிமைப்படுத்தலில் இருந்த 78 வயது முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்தார் என்று சுகாதாரத் தரப்புத் தெரிவித்தது.
அவர் சுகவீனம் காரணமாக சிகிச்சைபெற தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அவருடைய வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்தநிலையில், அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
அவர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மரண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் குறித்த மரண நிழ்வுக்குச் சென்றவர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

