
கம்பஹா மாவட்டத்தில் இன்று காலை வீசிய கடும் காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், நீர்கொழும்பு பிரதேசத்துக்கு உட்பட்ட 40 வீடுகளும், கம்பஹா மற்றும் கெசல்வத்துகொட ஆகிய பிரதேசங்களில் 15 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
கடுங்காற்றால் வீடுகளின் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், மின் இணைப்புகள் மீது மரம் முறிந்து விழுந்ததில் பல பிரதேசங்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

