
வாளுடன் ‘டிக்டொக்’ இளைஞன் கைது சங்கானையில் சம்பவம்!
வாளுடன் ‘டிக்டொக்’ காணொலி பதிவுசெய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானையைச் சேர்ந்த அந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
அவர் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

