கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை!

கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதுடைய மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை இன்று காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போகும் போது இவர் (டி-சேர்ட் மற்றும் கிரே கலர் சோட்ஸ்) அணிந்து இருந்தார் என்றும், இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவித்துள்ளனர்.

இவரை கண்டால் 0779498025, 0772836495 மற்றும் 0777948389 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply