மஹாவலி கங்கையில் கட்டுமரமொன்றைக் கட்டுவதற்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை, நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
நாவலப்பிட்டிய மெதகஹவதுர பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய கே.ஜி.திஸ்ஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும், மெதகஹவதுர பிரதேசத்தில் மஹாவலி கங்கைகைய கடப்பதற்கான பாலம் உடைந்து விழுந்துள்ளமையால், பிரதேச மக்கள் கங்கையைக் கடப்பதற்கு கட்டுமரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நாவலப்பிட்டியில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுமரத்தை கயிற்றால் கட்டுவதற்கு சென்றபோதே, இவர் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஒன்றறை கிலோமீற்றர் தொலைவில் இந்நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது


