
யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன!

அண்மைக்காலமாக குடியிருப்புக்களுக்குள் யானைகள் ஊடுறுவல் அதிகரித்து காணப்படுகின்றது. கல்முனை மாநகரசபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தில் அண்மைக்காலமாக யானைகள் குடியிருப்புக்குள் சென்று வீட்டு மதில்களை உடைத்து சென்றதுடன் மரங்களையும் துவம்சம் செய்து சென்றன.
ஆற்றங்கரை பக்கம் இருந்து குடியிருப்புக்குள் யானைகள் ஊடுறுவும் நற்பிட்டிமுனை வயல் வீதியில் எல்.ஈ.டி வல்ப்புகள் பொருத்தும் பணிகள் நேற்று (28.09.2021) மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கென்றி மகேந்திரன், என் இராஜரெட்ணம் ஆகியோரின் முயற்சியினால் குறித்த வீதியில் இன்று மின்குமிழ்கள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

