காப்புறுதி நிறுவனத்தில் தீ விபத்து!

திருகோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந் நிறுவனத்தின் பின்புறத்தில் வாகன உதிரிப்பாகங்கள் சேமித்து வைக்கப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இப் பகுதிக்கு வந்த திருகோணமலை நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச் சம்பவத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில், திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply