முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு தவிசாளர் அ.தவக்குமாரன் தலைமையில், இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, யாழில் கடந்த 23 ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் கண்டன தீர்மானம் பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமாரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்திற்கான ஆதரவை பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜயந், பிரதேச சபை உறுப்பினர்களான செ.பிரேமகாந், எஸ்.குகநேசன் ஆகியோர் வெளியிட்டு, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 19 பேரின் ஆதரவுடன், கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


