தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட, கல்மடுநகர் பகுதியில் நேற்று 1.30 மணியளவில் வீடு புகுந்து 24/2 தங்க நகைகள் மற்றும் 1,60,000 பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த ஒருவரை தாக்கி, சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு, வீட்டுக்குள் புகுந்து 24/2 தங்க நகைகளையும் 1,60,000 பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்
மேலும், இவ் வீட்டில் மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒரு கால் இல்லாத நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில், தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


