”சர்வதேசப் பொறிமுறைக்கு இலங்கையில் இடமில்லை” ஐ.நா. உள்­ளிட்ட அமைப்­பு­க­ளி­ட­மும் கூறி­விட்­டோம் என்­கி­றார் பீரிஸ்!

சர்வதேசப் பொறிமுறைக்கு இலங்கையில் இடமேயில்லை
ஐ.நா. உள்­ளிட்ட பல அமைப்­பு­க­ளி­ட­மும்
தெளி­வா­கக் கூறி­விட்­டோம் என்­கி­றார் பீரிஸ்!

“இலங்­கை­யின் உள்­ள­கப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க சர்­வ­தேச பொறி­மு­றையை ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டோம். அதே­போல இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நகர்­வு­க­ளை­யும் அனு­ம­திக்­க­மாட்­டோம். இந்த விட­யத்தை அனைத்­து­லக சமூ­கத்­தி­ட­மும், ஐ.நா. மற்­றும் அதன் கிளை அமைப்­பு­க­ளி­ட­மும் தெளி­வாக எடுத்­து­ரைத்­து­விட்­டோம்.”
இவ்­வாறு வெளி­வி­வ­கார அமைச்­சர் பேரா­சி­ரி­யர் ஜி.எல். பீரிஸ் தெரி­வித்­தார்.
ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டார்.
இது தொடர்­பில் அமைச்­சர் பீரிஸ் மேலும் கூறி­யவை வரு­மாறு,

“ஐ.நா. பொதுச்­ச­பை­யின் 76ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச உரை­யாற்­றி­னார். அத்­து­டன், இத்­தா­லி­யில் நடை­பெற்ற சர்­வ­தேச ஆன்­மீக மாநா­டொன்­றில் பிர­த­மர் மஹிந்த ராஜ­பக்ச பிர­தான உரையை நிகழ்த்­தி­னார். ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் 48ஆவது கூட்­டத்­தொ­ட­ரின்­போது இலங்கை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரால் வெளி­யி­டப்­பட்ட அறி­விப்­புக்கு நிகழ்­நிலை மூலம் நான் பதி­ல­ளித்­தேன்.

நியூ­யோர்க்­கில் வைத்து இரு தரப்பு சந்­திப்­பு­கள் இடம்­பெற்­றன. குறிப்­பாக பிரிட்­ட­னின் பிர­தி­நிதி மற்­றும் பொது­ந­ல­வாய அமைப்­பின் பிர­தான செய­லா­ளர் ஆகி­யோ­ரு­டன் பரந்­து­பட்ட கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­டி­ருந்­தேன். மேலும் சில சந்­திப்­பு­க­ளும் இடம்­பெற்­றன. மேற்­படி சந்­திப்­பு­க­ளின்­போது, ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யா­னது, இலங்கை தொடர்­பில் கடைப்­பி­டிக்­கும் அணு­கு­முறை தொடர்­பில் அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டது. இது தொடர்­பில் இலங்­கை­யின் நிலைப்­பாட்­டைத் தெளி­வா­கத் தெரி­யப்­ப­டுத்­தி­னோம்.

மனித உரி­மை­கள் பேர­வை­யு­டன் மாத்­தி­ர­மல்ல ஐ.நா. உட்­பட அதன் ஏனைய கிளை அமைப்­பு­க­ளு­டன் நாம் ஒத்­து­ழைப்­பு­டன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றோம். எதிர்­கா­லத்­தி­லும் இந்த நடை­முறை தொட­ரும். அதில் எவ்­வித மாற்­ற­மும் வராது. கொரோ­னாப் பர­வ­லுக்கு மத்­தி­யி­லும் அபி­வி­ருத்தி மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றம் பற்­றி­யும் எடுத்­து­ரைத்­தோம்.

அத்­து­டன், இலங்­கை­யின் உள்­ள­கப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கும் கடப்­பாடு தேசிய நிறு­வ­னங்­க­ளுக்கே இருக்­கின்­றது. அதற்­கான பொறுப்பை நாம் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­க­மாட்­டோம். அவ்­வாறு வழங்­கு­வது அர­ச­மைப்­புக்கு முர­ணான செய­லா­கும் என்­ப­து­டன் அர­சி­யல் கட்­ட­மைப்­புக்­கும் எதி­ரான நட­வ­டிக்­கை­யா­கும்.
சிறிய நாடோ, பெரிய நாடோ, சகல நாடு­க­ளை­யும் பொது­வா­கவே கருத வேண்­டும் என்­பதே ஐ.நாவின் பிர­தான கோட்­பா­டா­கும். எனி­னும், ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யா­னது இலங்­கையை இலக்கு வைத்து செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

சர்­வ­தேச பொறி­மு­றையை உரு­வாக்கி, சாட்­சி­க­ளைத் திரட்டி, இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றம் முன்­னி­லை­யில் கொண்­டு­செல்­வ­தற்கு முயற்சி எடுக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு இட­ம­ளிக்­க­மாட்­டோம். சாட்­சி­க­ளின் தக­வல் வெளி­யி­டப்­ப­டாது. எந்த அடிப்­ப­டை­யில் சாட்­சி­கள் திரட்­டப்­ப­டு­கின்­றன என்­ப­தும் தெரி­யாது.
இதற்­காக பெரு­ம­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. உல­கில் தடுப்­பூசி தேவைப்­ப­டு­கின்­றது. பல நாடு­க­ளில் தடுப்­பூசி திட்­டம் துரி­த­மாக இடம்­பெ­ற­வில்லை. அவற்­றுக்கு நிதியை பயன்­ப­டுத்­த­லாம்.

உல­கில் வேறு நாடு­க­ளில் பல பிரச்­சி­னை­கள் உள்­ளன. இவற்­றை­யெல்­லாம் விடுத்து இலங்கை இலக்கு வைக்­கப்­ப­டு­வது ஏன்?
மனித உரி­மை­கள் பேர­வை­யில் நடை­பெற்ற விவா­தத்­தின்­போது அணி­சேரா நாடு­கள் மற்­றும் முஸ்­லிம் நாடு­கள் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தின. மனித உரிமை விவ­கா­ரத்தை உள்­ளக பிரச்­சி­னை­க­ளில்  பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என­வும் அவை சுட்­டிக்­காட்­டின.” -என்­றார்.

Leave a Reply