பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு, இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர் சிலர் கலந்துகொண்டனர்
மேலும், இச் சந்திப்பு தொடர்பில் இதுவரை எந்த விடயத்தையும் பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


