கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தவிசாளர் கொரோனா தொற்றால் பலி

கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மேலும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55 ஆவது வயதில் உயிரிந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த இவருக்கு, மீளவும் கொவிட் தொற்று உறுதியானதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply