
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக நிரந்தர எலும்பியல் அறுவைச்சிகிச்சை வைத்திய நிபுணர் நியமனம்.

வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரனின் அடுத்த கட்ட திட்டமிடலில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் சேவையினை பூரணப்படுத்தும் வகையில்இ எலும்பியல் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணரின் தேவையை சுகாதார அமைச்சுக்கு எடுத்தியம்பியதன் பலனாக இவ் நியமனம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியர் சதுரங்க விதான கமகே (எலும்பியல் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணர்) சேவையானது நாளை (29\09\2021 புதன்கிழமை ஆரம்பமாவதுடன், ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் சாய்சாலை மண்டபத்தில் வழமையான கிளினிக் முறைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது.
எனவே பொதுமக்கள் இச்சேவையினை உங்கள் தேவைகளுக்கு பயன்படுதிக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகின்றது.

