எல்லை தாண்டிய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்- சண்முகநாதன்!

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளமையால் ஆயிரத்திறக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்குக் கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.

வடமராட்சி, கிழக்கு பிரதேசத்தில் பல மீனவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பில், உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில், மக்களைக் கூட்டி போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மக்களின் இவ்வாறான பிரச்சினைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இழுவை மடி பிரச்சினை என்பது எமது பிரதேசத்திற்குள் வரக் கூடாது எனவும், அதைவிட நஷ்டஈடும் வழங்கவேண்டும் என்றார்.

இந்திய, இலங்கை உறவு எப்படி இருந்தாலும், இந்த எல்லை தாண்டிய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply