மா.ந.சபை உறுப்பினர் ராஜன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மா.ந.சபை உறுப்பினர் ராஜன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (28) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சந்திரசேகரம் ராஜன் தெரிவிக்கையில்,

பெரியநீலாவணையிலுள்ள தனது 26 ஆம் திகதி மாலை தான் இல்லாதவேளை அங்கு வந்த பொலிசார் வீட்டினுள் புகுந்து தேடுதல் நடாத்திவிட்டு எனது மனைவி மகனிடம் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர். நான் வெளியில் சென்றுள்ளதாக வீட்டார் கூறியும் பொலிசார் சுமார் 4மணிநேரம் அங்கு வீட்டைச்சுற்றி நின்றிருந்தனர்.

தனியாக இருந்த எங்கள் குடும்பத்தார் 4மணிநேரம் பதட்டத்துடன் இருந்துள்ளார்கள்.

தானில்லாதசமயம் இவ்வாறு நடந்துகொண்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளேன்.

ராஜன் மேலும் கூறுகையில் கல்முனைப்பொலிசார் 25ஆம் திகதி என்னிடம்வந்து உயிர்அச்சுறுத்தல் விடுத்து தடைஉத்தரவினை கையளித்துச்சென்றனர். மறுநாள் மாலை 4.30மணியளவில் கல்முனைப்பொலிசாரும் பச்சைஉடை தரித்த ஆயுதம் தாங்கியவர்களும் எனது வீட்டிற்கு வந்து சுற்றிவளைத்து நின்றிருக்கின்றனர். இரவு 8.30 மணிவரை நின்றுவிட்டு மனைவியிடம் விசாரித்துச்சென்றுள்ளனர். நான் வெளியே சென்றுள்ளதனால் அவர்களைக்காணமுடியவில்லை.எனவே உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளே;. எனக்கு மனிதஉரிமை ஆணைக்குழுவால் நிம்மதியாக வாழ வகைசெய்யவேண்டும். என்றார்.

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் எ.அசீஸிடம் முறைப்பாடு நேற்று யையளிக்கப்பட்டது.

Leave a Reply