பதுளை நகரில் ஏற்படும் கழிவுகளை அகற்றும் பிரச்சனைக்கு தீர்வொன்று எட்டப்பட்டுள்ளது.
பதுளை மாநகர சபையால் சேகரிக்கப்படும் பொலித்தின் கழிவுகளை புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்காக அனுப்ப பதுளை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பதுளை மாநகர சபையின் கழிவுகள் பிரிவில், மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத பொலித்தீன் வேறாக்கப்படவுள்ளது.
இவ்வாறு, வேறாக்கப்பட்ட கழிவுகள் வாராந்தம் 18 டொன் பொலித்தின் சேகரிக்கப்படுவதாகவும் மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசிறி தெரிவித்துள்ளார்.
அதன்படி, புத்தளத்துக்கு அனுப்பபடும் பொலித்தீன் கழிவுகள், குறித்த சீமெந்து நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதென்றும் இதனால் பதுளை நகரில் ஏற்படும் கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.


