போதிய அதிகாரம் இல்லாததால் யுகதனவி ஒப்பந்தத்தை தடுக்க முடியவில்லை – வாசுதேவ நாணயக்கார

எங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் அரசாங்கத்தில் போதுமான அதிகாரம் இல்லை என்பதால் யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை எங்களால் தடுக்க முடியாது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

மேலும்,

அமைச்சரவை எங்களிடம் அதை பற்றி அறிவிக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அந்த ஒப்பந்தத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒப்பந்தத்திற்கு எதிராக பங்காளி கட்சிகள் எழுப்பிய பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாவிட்டால் இந்த ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply