நாடு திறந்தவுடன் போராட்டம் வெடிக்கும்!

நாடு மீண்டும் திறக்கப்பட்டவுடன், நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தங்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்க்க கோரி அவர்கள் இந்த போராட்டங்களை முன்னெடுக்க உள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் திறந்தாலும், அவர்கள் கற்பிக்கவோ அல்லது பாடசாலைக்கு செல்லவோ வரமாட்டார்கள் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள்.

இந்த முறை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் மற்றும் பல தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply