திருமலையில் 300 இலவச குடி நீர் இணைப்புக்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவசகுடி நீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணம் கட்டிய பற்றுச்சீட்டுகளும் இணைப்பினை பெறுவதற்கானா ஆவணங்களும் பயனாளிகளுக்கு வழங்கும் திகழ்வுகள் புல்மோட்டை, இறக்கக்கண்டி, மூதூர், தோப்பூர், ஈச்சலம்பற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்று(28) இடம் பெற்றன.

இந் நிகழ்வுகளில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உட்பட நிகழ்வுகள் நடைபெற்ற பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,நீர் வழங்கள் காரியாலய பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply