ஆப்கானிஸ்தானில் 2,500 வீரர்களை வைத்திருக்குமாறு பைடனுக்கு அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர்.

ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அல் கொய்தாவுடன் இன்னும் தொடர்பு கொண்டுள்ளது.

இந்நிலையினுள் அங்கிருந்து செப்டம்பர் மாத இறுதிக்குள், அமெரிக்கத் துருப்பினரை முற்றிலும் வெளியேற்ற ஜனாதிபதி பைடன் சென்ற ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அது குறித்து, அவருக்கு மாறுபட்ட ஆலோசனை வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply