யாழ்ப்பாணம் பாசையூரில் 1300 கிலோ மஞ்சள் மீட்பு!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கடத்தி வரப்பட்ட மஞ்சள் யாழ்ப்பாணம், பாசையூரில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதில், 1300 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களின் முயற்சியில் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிய வருகின்றது.

மேலும், கைப்பற்றப்பட்டுள்ள மஞ்சளை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply