முல்லை மாவட்டச் செயலாளருக்கு கொரோனா தொற்று!

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காய்ச்சல் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக சுயதனிமைப்படுத்தலில் உள்ளமையினை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் ஆதவன் செய்திப்பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.

Leave a Reply