பசறை, எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில், பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பசறை வீதி, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
மேலும், பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


