
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
களுதாவளை கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற காரும் மட்டக்களப்பில் இருந்து களுதாவளை நோக்கு சென்ற மோட்டர்சைக்கிளும் கிரான்குளம் வீதி வளைவு பகுதியில் சம்பவதினமான நேற்று 5 மாலை மணிக்கு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செனடற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்;து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காரை செலுத்திசென்றவரை பெலிசர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


