திருகோணமலையில் தொடரும் துஷ்பிரயோக சம்பவங்கள்!

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினெழு வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபயொருவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினெழு வயதுடைய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபயொருவரை அடுத்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

முட்டுச்சேனை,மாவடிச்சேனை,வெருகல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த  பதினெழு வயதுடைய பெண்ணொருவரை இரண்டு மாதங்களாக காதலித்து, அவரை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கெதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளையும் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply