400 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால உதவி!

முல்லைத்தீவில் 400 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால உதவி வழங்கும் நிகழ்வு இன்று தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி ஜந்து பயனாளிகளுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத் தடை காரணமாக பாதிப்புக்குள்ளான இயலாமையுடன் கூடிய குடும்பங்களுக்கு சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் சமூக உள்ளடக்கம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உலர் உணவுப்பொருட்கள் மற்றும் கொரோனாப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத் திட்டம் BMZ நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் Child fund ஜெர்மன் மற்றும் Child fund ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கையில் இயலாமையின் கூடிய நபர்களுக்காக பணிபுரிந்து கொண்டிருக்கும் ORHAN மற்றும் Voice நிறுவனங்களில் நெறிப்படுத்தலில் ஊடாக இவ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா, முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள், சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் அங்கவீனமுற்ற நபர்களின் சமூக உள்ளடக்கம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் ORHAN பிரதிநிதிகள் மற்றும் Voice Area Federatation பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கிவைத்தனர்.

மேலும், இந் நிகழ்ச்சித் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 400 இயலாமையுடன் கூடிய நபர்கள் பயன்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply