நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குட்டிதுவ பகுதியில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் நேற்று காலை சிறிய படகின் மூலம் மீன்பிடி தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையிலே, இவ்வாறு படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் நீர்கொழும்பு குட்டிதுவ பகுதியில் வசிக்கும் 61 மற்றும் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் கடற்படை மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்தே இத்தகைய தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


