கொரோனா தொற்று நோயின் மோசமான கட்டம் முடிந்துவிட்டது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டி ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், உலக மக்கள் அனைவரும் தமது பொறுப்பு எனக் கருதி, கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தொற்று நோயை முடிவுக்குக் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்று நோயின் கெட்டகாலம் முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தனது இளம் பருவத்தை கடந்துள்ளது. இதனடிப்படையில் தொற்று நோய் நிலைமை படிப்படியாகக் குறையும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மத்திய நிலையத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் சிலர் மேற்கொண்ட பரிசோதனையை மேற்கோள்காட்டி பேராசிரியர சந்திம ஜீவந்தர இதனைக் கூறியுள்ளார்.
இந்தப் பரிசோதனைக்கு அமைய கொரோனா தடுப்பூசி மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


