முந்தல் கந்ததொடுவாவ கிராமத்தில் பெண் ஒருவரை குளவி தாக்கி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தல் கந்ததொடுவாவ பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான லலிதா தெரசா சோவிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த உறவினர் ஒருவரைப் பார்க்க கணவருடன் சென்ற வேளையிலே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும்
பிரேத பரசோதனைக்காக உடல் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


