<!–
நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அரச நிறுவனங்களின் பிரதானிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட சில தரப்பினருடன் அண்மையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


