பொலிபித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்பத, பல்லேகல பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உல்பத, பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், குறித்த நபருக்கும், பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முறுகல் நிலையே இந்த கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


