மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளாமைச்சேனை பிரதேசத்தில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நபர் ஓட்டமாவடி, மீராவோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான, 54 வயதுடைய அலியார் முகம்மது காசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இவர் பெரும்போக வேளாண்மை செய்கைக்கு தனது வயலை தயார்படுத்தும் நிலையில், வயலில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
அதையடுத்து, இன்று அதிகாலை வயல் பிரதேசத்திற்கு வந்த யானை இந்நபர் தங்கியிருந்த வாடியை சேதப்படுத்தியமையுடன், விவசாயியையும் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பில், விசாரனைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


