
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

