மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், தாயாருடன் வாழ்ந்துவரும் இச் சிறுமி தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை பலாத்தகாரம் செய்துள்ளார்.
இதுதொடர்பில், பாதிக்கப்பட்ட சிறுமி தயாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, அவ் இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கைது செய்த இளைஞனை இன்று ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


