வீதி விதிமுறைகளை மீறிய சாரதிகள் மூவருக்கு நிதிமன்றினால் தண்டம் விதிப்பு!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், வீதி விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த மூவரும் 25 மற்றும் 27ம் திகதிகளில் இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் நேற்றைய தினம் (2021.09.29) மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, ரூபா 50,000 உம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய இருவருக்கு தலா ரூபா 25,000 இணையும் நீதிவான் தண்டப்பணமாக விதித்தார்.

Leave a Reply