யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் தாயாருக்கு கொரோனோத் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழந்தார்.
தாய்க்கு கடந்த 22 ஆம் திகதி கொரோனோத் தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார், இந்நிலையில் வீட்டிலிருந்த அவரது குழந்தை உயிரிழந்த நிலையில் நேற்று வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்குத் தொற்று கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி இன்று மேற்கொள்ளவுள்ளார்.


