இலங்கையில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீணடிப்பு!

இலங்கையில் தினமும் ஐந்தாயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணடிக்கப்படுகின்றது எனச் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இத் தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன் என்றும், நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப்படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது.

இந்நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply