விளையாட்டு வினையானது! சிறுமியின் உயிர் பிரிந்தது!

நாவுல – கணுமுலுயாய பிரதேசத்தில், ஊஞ்சல் கயிறு இறுகியதால் 10 வயது சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், கணுமுலுயாய பிரதேசத்தில் நேற்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவது,

குறித்த சிறுமி, நாற்காலியின் உதவியுடன் தனது வீட்டிலுள்ள கூரை சட்டத்தில் புடவையொன்றினால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார்.

இதன்போது நாற்காலி விலகியதால் ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது, சிறுமியின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply