எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ்ஆர திறந்த சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் நேற்று தப்பி ஓடியுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரிகள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
திருட்டு, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மாத்தறை நீதிமன்றால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட 28 மற்றும் 36 வயதுடைய இருவரே இவ்வாறு தப்பியோடி உள்ளனர்.
ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் இவ்விருவரும் தப்பிச்சென்றுள்ளமையால், பொதுப்போக்குவரத்து வாகனங்களினூடாக தப்பிச்சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


