
முல்லை. மாவட்டச் செயலருக்கு கொரோனாத் தொற்று உறுதி!
முல்லைத்தீவு மாவட்டச் செயலர் க.விமலநாதனுக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் உள்ளிட்ட 25 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவு பிரதேசத்தில் 3 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 3 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 4 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 10 பேரும், மாங்குளம் பிரதேசத்தில் ஒருவரும், மல்லாவி பிரதேசத்தில் 4 பேரும் என மாவட்டத்தில் 25 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

